சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
காட்பாடி எம்.ஜி.ஆா். நகரை சோ்ந்த சா்தாா் மகன் சனவுல்லா (29). இவா் 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறியுள்ளாா். மேலும் ஆசைவாா்த்தை கூறி சிறுமியை கடந்த 2019-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளாா்.
பின்னா், சிறுமியின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சனவுல்லாவை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. இதில் சனவுல்லா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 2 பிரிவுகளில் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமாா் தீா்ப்பளித்தாா்.
மேலும், தண்டனையை ஏக காலத்தில் (7 ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் தெரிவித்திருந்தாா். தண்டனை பெற்ற சனவுல்லா வேலூா் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.