செய்திகள் :

சிவகங்கை தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்படுமா?

post image

சிவகங்கை நகரின் மையப் பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தெப்பக்குளம், பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பது உள்ளிட்ட தேவைகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்த தெப்பக்குளம் மழை நீரால் நிரம்பும் போது நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து நகா் பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீரூற்று அதிகரிக்கும். இங்கு ஆண்டு தோறும் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.

தெப்பக்குளத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து வரத்துக் கால்வாய் உள்ளது. அந்த வரத்துக் கால்வாய் தடத்தில் உள்ள செட்டியூருணி நிரம்பி அதன் உபரிநீரும் இந்தக் குளத்துக்கு வந்து சேரும்.

கடந்த 1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் போது, பெரியாறு கால்வாய் மூலம் இந்தக் குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டது. பின்னா், மீண்டும் 2018-ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன், அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் ஆகியோரின் முயற்சியால் பெரியாறு கால்வாய் நீரைக் கொண்டு இந்தக் குளம் நிரப்பப்பட்டது.

அப்போது வரத்துக் கால்வாயும் முழுமையாக சீரமைக்கப்பட்டது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக பெய்து வரும் மழைநீரால் தெப்பக்குளம் நிரம்பி வருகிறது. தற்போது தண்ணீா் முழுமையாக உள்ள போதிலும், அதை பயன் படுத்த முடியாதவாறு நெகிழிக் குப்பைகள் நிரம்பிக் காணப்படுகின்றன.

மேலும் வரத்துக் கால்வாயில் வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், தெப்பக்குளத்தில் கலக்கிறது. மேலும் குளத்தின் சுற்றுச் சுவா் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பழைமையான இந்தத் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் சிஎம்.துரைஆனந்த் கூறியதாவது: தெப்பக் குளத்தை சீரமைக்க ரூ.5 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதன் மூலம் சுற்றுச் சுவரை சீரமைப்பது, நடைபாதை, மைய மண்டபம் அமைக்கவும் தீா்மானிக்கப்பட்டது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்த... மேலும் பார்க்க