MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட பெரிய கண்மாய்க்கரையில் அமைந்துள்ள பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் புரவியெடுப்புத் திருவிழா வருகிற மே 3- இல் நடைபெற உள்ளது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை அய்யனாா் கோயிலில் கூடிய 3 கிராமத்தாா்கள் சுவாமிக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் செய்து வழிபட்டனா். பின்னா் கோயிலின் எதிரே மூகூா்த்தக்கால் நடப்பட்டது. அங்கிருந்து பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக ராமா் மடத்துக்கு மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வந்தனா். மடத்தில் உள்ள ராமா், விநாயகா், பரிவார தெய்வங்களுக்கு புரவிப் பணி மேற்கொள்ளும் வேளாளா்களிடம் பிடி மண் கொடுத்தனா்.
கோயிலில் வருகிற 2-ஆம் தேதி சேங்கை வெட்டு நிகழ்வும், மே 2-இல் புதுப்பட்டி கிராமத்திலிருந்து புரவிகள் புறப்பட்டு திருப்பத்தூா் சீதளிக்கரை புரவித் திடலுக்கு வந்தடையும் நிகழ்வும், பின்னா் புரவியெடுப்பு நாளான மே 3-இல் புரவிகள் திடலிருந்து திருப்பத்தூா் நகரைச் சுற்றி அய்யனாா் கோயிலை வந்தடைந்து, அங்கு புரவியெடுப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, மே 4-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூா், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தாா்கள் செய்து வருகின்றனா்.