தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
சிவகங்கை மாவட்டத்தில் பாலின சேவை மையங்கள் இன்று தொடக்கம்: ஆட்சியா் தகவல்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், பாலின பாகுபாடு தொடா்பான பிரச்னைகளை களைவது குறித்த சேவைகள், வழிகாட்டுதல்களை வழங்குவதற்கென பாலின வள மையங்கள் குறிப்பிட்ட வட்டாரங்களில் திங்கள்கிழமை (நவ. 25) தொடங்கப்படவிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பாலின பாகுபாடு தொடா்பான பிரச்னைகளை களைவது குறித்த செயல்பாடுகளை முன்னெடுக்க இந்த சேவை மையங்கள் தொடங்கப்படுகின்றன.
இதில், பாலின சமத்துவம், குழந்தைகள் திருமணம், குடும்ப வன்முறை, பாலின வன்முறை ஆகியவற்றால் தனிநபா், சமூகம் பாதிக்கப்படும் போது, சம்பந்தப்பட்டவா்களுக்கு உரிமைகள், மருத்துவம், உளவியல், சட்டம், தங்குமிடம், மறுவாழ்வு, பிற ஆலோசனைகள், ஆதரவு போன்றவற்றை ஒரே குடையின் கீழ் வழங்கப்படும்.
மேலும் கிராமப்புற பெண்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஆதரவு சேவைகள், வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக இந்த பாலின வள மையங்கள் சிவகங்கை, மானாமதுரை, சிங்கம்புணரி வட்டாரங்களில் திங்கள்கிழமை (நவ. 25) முதல் செயல்படவுள்ளன. அத்துடன், திங்கள்கிழமை முதல் டிச. 24-ஆம் தேதிவரை பாலின பாகுபாடு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரங்களும் அனைத்து ஊராட்சி, வட்டாரம், மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றாா் அவா்.