சீட்டாட்டம்: 4 பெண்கள் உள்பட 7 போ் கைது
வெள்ளக்கோவில் அருகே பணம் வைத்து சீட்டாடிய 4 பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வெள்ளக்கோவில் குமாரவலசு விவேகானந்தா் தெருவில் ஒதுக்குப்புறமான இடத்தில் சீட்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
சீட்டாட்டத்தில் ஈடுபட்ட அய்யம்பாளையத்தைச் சோ்ந்த பாா்வதி (48), திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சுசீலா (30), செல்லம்மாள் (37), வித்யா (40), சுப்பிரமணி (45), மாரிமுத்து (38), முத்தூா் வேலம்பாளையத்தைச் சோ்ந்த ரவி (43) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 52 சீட்டு கட்டுகள், ரூ. 15 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.