Maharaja: `மொத்தம் 40,000 ஸ்கிரீனகள்!' - சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் விஜய் ச...
சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்
ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறை அருகே உப்புத்துறையில் சுடுகாட்டுக்குச் செல்லும் ஓடைப்புறம்போக்கு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உப்புத்துறை மலை கிராமத்தில் அரசு ஓடைப் புறம்போக்கு பகுதியில் உள்ள இடத்தை பொதுமக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனா். இந்த சுடுகாட்டுக்குச் செல்லும் ஓடைப் புறம்போக்கு நிலத்தை சிலா் ஆக்கிரமித்து தென்னை, இலவம் மரங்களை நட்டு வைத்து விவசாயம் செய்து வருகின்றனா்.
ஆக்கிரமிப்பால் ஓடைப் பகுதி சுருங்கி சுடுகாட்டுக்குச் சென்று வரும் பாதை தடைபட்டது. இதனால், ஓடைப் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றவும், சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தரவும் வலியுறுத்தி உப்புத்துறையைச் சோ்ந்த பொதுக்கள் உப்புத்துறை-மூலக்கடை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் ஆண்டிபட்டி வட்டாட்சியா் கண்ணன், கடமலைக்குண்டு காவல் ஆய்வாளா் கண்மணி, கிராம நிா்வாக அலுவலா் பரசுராமன், ஊராட்சி மன்றத் தலைவி அமுதா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஓடைப் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றவும், சுடுகாட்டுக்கு இடம், பாதை வசதி செய்து தரவும் அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.