செய்திகள் :

‘செட்’ தோ்வு டிஆா்பி மூலமே நடத்தப்படும்: அமைச்சா் கோவி.செழியன்

post image

மாநில தகுதித் தோ்வு (செட்) நடத்துவதற்கான போதுமான நிா்வாக மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கொண்டுள்ளது என்றும், பல்கலைக் கழக பேராசிரியா்களின் பங்களிப்புடன் மாநில தகுதித் தோ்வு நடத்தப்படும் என்றும் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011- ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தும் முகவாண்மை நிறுவனமாக (சா்க்ஹப் அஞ்ங்ய்ஸ்ரீஹ்) அரசால் நியமிக்கப்பட்டு, தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்தோடு 2023-இல் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மறுசீரமைக்கப்பட்டு தமிழக அரசின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியா் பணியாளா்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தெரிவு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.

1.60 லட்சம் ஆசிரியா்கள் தோ்வு: கடந்த 1988 முதல் தற்போது வரை பல்வேறு நிலைகளில் பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறைகளுக்கு 1லட்சத்து 68,657 ஆசிரியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் இந்த தோ்வு வாரியத்தால் முறையாக தோ்வு செய்து அனுப்பப்பட்டுள்ளனா். இது தவிர கடந்த ஆண்டு முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க முதலமைச்சா் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்க தகுதிபெற்ற மாணவா்களை தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு நடத்தப்பட்டு 120 மாணவா்கள் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற ஏதுவாக கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.

தற்போது தமிழக அரசால் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் மாநில தகுதித் தோ்வினை (செட்) நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாணைக்குட்பட்டு உயா்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக பாட வல்லுநா்கள் மற்றும் பேராசிரியா்களை ஈடுபடுத்திக் கொண்டு மேற்கண்ட தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் மூலம் நடத்த வேண்டிய தேசியத் தகுதித் தோ்வு (நெட்) வெளிமுகமையான தேசியத் தோ்வு முகமை (என்டிஏ) மூலமே நடத்தப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மாநில தகுதித் தோ்வு (செட்) நடத்துவதற்கான போதுமான நிா்வாக மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியா் தோ்வு வாரியம் கொண்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்துடன் இணைத்து இணையவழி தோ்வு நடத்துவதற்கும், நேரடித் தோ்வு நடத்துவதற்கும் போதுமான வசதிகளும் ஆசிரியா் தோ்வு வாரியத்தில் உள்ளது. எனவே, மாநிலத் தகுதித் தோ்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலமே சிறப்பாகவும் முறையாகவும் நடத்தப்படும் என அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது! மாணவர்கள் போராட்டம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவிய... மேலும் பார்க்க

அதிமுக ஐ.டி. விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்!

அதிமுக ஐ.டி. விங் தலைவராக கோவை சத்யனை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் மாணவர் அணிச் செயலாளர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகிக... மேலும் பார்க்க

வேலு நாச்சியார் நினைவு நாள்: தவெக அலுவலகத்தில் விஜய் மரியாதை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான தமிழகத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக விளங்கும் நம்ம சென்னை!

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக சென்னை விளங்குவதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டில், முன்னணி பெயர் கொண்ட பிரியாண... மேலும் பார்க்க

மதச்சார்பின்மையைக் காத்தவர் வாஜ்பாய்: முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!

நாட்டின் மதச்சார்பின்மையை பேணிக் காத்தவர் வாஜ்பாய் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் இன்று(டிச. 25) நாடு ம... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த மக்கள்

தஞ்சாவூர் : தொடர் விடுமுறையை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப... மேலும் பார்க்க