2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
சென்னை: அந்தரங்க படங்களை வைத்து மிரட்டிய தந்தை, மகன்; இளம்பெண் கொடுத்த புகாரில் கைது; நடந்தது என்ன?
மும்பையில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் விடுமுறை நாள்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வேன். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சுஜித் என்பவர் எனக்கு அறிமுகமாகினார். நானும் அவரும் நெருங்கிப் பழகி வந்தோம். அப்போது அவர் என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை அனுப்பச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார். அந்தப் படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிடாமலிருக்க என்னிடம் பணம் கேட்கத் தொடங்கினார் சுஜித். வேறுவழியின்றி சுஜித் கேட்ட பணத்தை நான் அனுப்பி வந்தேன்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு என்னைத் தொடர்பு கொண்ட சுஜித், அவரின் அப்பா வின்சென்ட் ஆகியோர் உடனடியாக 50,000 ரூபாய் பணம் அனுப்பும்படி மிரட்டினர். அப்போது நான், 'என்னிடம் பணம் இல்லை' என்று கூறினேன். இதையடுத்து சுஜித், என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். எனவே சம்பந்தப்பட்ட சுஜித், அவரின் அப்பா வின்சென்ட் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த இளம்பெண் கொடுத்த தகவலின்படி சுஜித், அவரின் அப்பா வின்சென்ட் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். . விசாரணைக்குப்பிறகு இருவரையும் கைது செய்து போலீஸார், இருவரையும் சிறையில் அடைத்தனர். கைதான சுஜித், வின்சென்ட் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவைச் சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஆய்வுக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb