செய்திகள் :

கிண்டி: `அம்மாவுக்கு சரியா சிகிச்சை அளிக்கல’ மருத்துவருக்கு கத்திகுத்து; போராட்டத்தில் மருத்துவர்கள்

post image

சென்னை கிண்டியில் அரசு பன்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என அந்தப் பெண்ணின் மகன் விக்னேஷ் என்பவர் மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்தநிலையில் இன்று (13.11.2024) காலை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகநாதன் பணியில் இருந்தார். அப்போது டாக்டரிடம் விக்னேஷ் என்பவர், `என்னுடைய அம்மாவுக்கு ஏன் இன்னும் குணமாகவில்லை. ஹாஸ்பிட்டலில் சரியாக சிகிச்சை அளிப்பதில்லை’ என தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனால் அங்கிருந்தவர்கள் விக்னேஷை சமரசப்படுத்த முயன்றனர்.

சம்பவம் நடந்த அரசு மருத்துவமனை

வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஷ், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டாக்டர் பாலாஜி ஜெகநாதனைக் குத்தினார். இதில் நிலை குலைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். டாக்டரை குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற விக்னேஷை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர், காயமடைந்த டாக்டரை மீட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து விக்னேஷை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து என்ன நடந்தது என்று போலீஸார் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த டாக்டரிடம் நலம் விசாரித்தார். அதோடு டாக்டரை கத்தியால் குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்தச் சூழலில் அரசு மருத்துவர்கள், பணியின் போது தங்களுக்கு பாதுகாப்பில்லை என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், ``கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அரசு மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

வழக்கறிஞர் கொலையில் கூலி பாக்கி; உ.பி போலீஸில் புகாரளித்த கூலிப்படைத் தலைவன்!

உத்தரப்பிரதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த கூலிப்படைத் தலைவன், கொலைக்கான மீதி கூலித் தொகையை பெற்றுத் தருமாறு, மீரட் நகரில் உள்ள காவல்... மேலும் பார்க்க

சென்னை: 45 நாள்களேயான ஆண் குழந்தை கடத்தல் - அரசு உதவி தொகை வாங்கி தருவதாகக் கூறி கடத்திய பெண்!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி (31). இவருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்ததோடு ஆண் குழந்தையை கண்ணு... மேலும் பார்க்க

சகோதரியின் காதலனுக்கு மது விருந்து... துண்டு துண்டாக சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்..!

வேறு மதத்தை சேர்ந்தவர்களை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ குடும்பத்தில் கடும் எதிர்ப்பை சந்திக்கின்றனர். மும்பையில் அவ்வாறு வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். மும்ப... மேலும் பார்க்க

சென்னை: மது போதையில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர்; தர்ம அடி கொடுத்த மக்கள்; பின்னணி என்ன?

தென்சென்னையில் வசிப்பவர் ராணி (34) (பெயர் மாற்றம்). இவர், சென்னை போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்காடு சாலை பகுதியில... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் பெண்களிடம் பாலியல் சீண்டல்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமைக் காவலர்!

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் சுரேஷ். கதிர்வேல் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் குடிபோதையில் அருகிலுள்ள ஒரு வீட்டின் சுவர்... மேலும் பார்க்க

மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படி... மேலும் பார்க்க