செய்திகள் :

தூத்துக்குடி: மதுபோதையில் பெண்களிடம் பாலியல் சீண்டல்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமைக் காவலர்!

post image

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் சுரேஷ். கதிர்வேல் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் குடிபோதையில் அருகிலுள்ள ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கு இருந்த பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.

ஆல்பர்ட் ஜான் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெண்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து சுரேஷை அந்த வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். போலீஸாரிடம் புகார் அளிக்கப் போவதாக அந்த வீட்டிலுள்ள பெண்கள் கூற, “என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நானே போலீஸ், என் மேலயே புகார் கொடுக்கப் போறீங்களா?” எனச் சொல்லி மிரட்டியுள்ளார்.   மறுநாள் இது குறித்து அந்த குடும்பத்தினர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், தலைமைக் காவலர் சுரேஷ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தன் செயலுக்கு அந்த ஏட்டு மன்னிப்பு கேட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு இந்த புகாரை எடுத்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காவலர் சுரேஷ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து  காவலர் சுரேஷ் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.

மாவட்ட காவல் அலுவலகம்

சுரேஷ் மீது ஏற்கனவே இது போன்ற பல்வேறு புகார்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. போலீஸாரின் விசாரணையில் சுரேஷ் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டன. அதையடுத்து, தலைமைக் காவலர் சுரேஷ் மீது, சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சுரேஷை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்

திருச்சி: காவிரி ஆற்றங்கரையில் இரண்டாவது முறையாக கிடைத்த ராக்கெட் லாஞ்சர்! - அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 - ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அது கொரிய போரின் போது அமெரிக்க ... மேலும் பார்க்க

வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ஒலக்காசி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (61).முன்னாள் ராணுவ வீரரான சேகர், கடந்த 2022ஆம் ஆண்டு 16 வயதான பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ... மேலும் பார்க்க

பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - நீதிமன்றம் அதிரடி!

இன்று சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத முருகனுக்கு நீதிபதி ... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வகுப்பறையில் மாணவரை கால் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர்; பரவிய வீடியோ, பாய்ந்த நடவடிக்கை

சேலம் மாவட்டம், தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு... மேலும் பார்க்க

இறந்ததாக அறிவித்த 3 மருத்துவர்கள்; தகனம் செய்யும்போது உயிர்த்தெழுந்த இளைஞர் - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் வசித்தவர் ரோஹிதாஷ் குமார் (25). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரின் உறவினர்கள், அ... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு; போலீஸ் விசாரணை!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. இவர் விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்ற... மேலும் பார்க்க