செய்திகள் :

சென்னை: நகைக்கடை ஓனருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - தங்கம், வைர நகைகளைத் திருடியது எப்படி?

post image

சென்னை தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை சுரேஷ் என்பவர் நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி இந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை சமாளிக்க கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் ரேவதி. இவர் விற்பனை பிரிவில் சில நாள்கள் வேலை செய்திருக்கிறார். பின்னர் அவர் வேலையிலிருந்து திடீரென நின்றுவிட்டார். அதனால் ரேவதியை தொடர்பு கொண்ட கடையில் உள்ளவர்கள் ஏன் வேலைக்கு வரவில்லை என்று விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அவர் உடல் நலம் சரியில்லை எனக் காரணம் கூறியதோடு வேலைப்பார்த்த நாளுக்குரிய சம்பளத்தை தரும்படி கேட்டிருக்கிறார்.

ரேவதி

இந்தநிலையில் கடையில் நகைகளை சரிபார்த்திருக்கிறார்கள். அப்போது ரேவதி வேலைப்பார்த்த விற்பனை பிரிவில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளுக்குப் பதில் கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருந்தை ஊழியர்கள் கண்டறிந்து ஓனருக்கு தகவல் தெரிவித்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த கடையின் ஓனர் சுரேஷ், இதுகுறித்து சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரில் ரேவதி என்பவரின் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாலா தலைமையிலான போலீஸ் டீம் ரேவதி குறித்த விவரங்களை கடையில் கேட்டு பெற்றது. மேலும் கடையில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரேவதி, கடையில் உள்ள ஒரிஜினல் தங்க நகைகள், வைர நகைகளை திருடி விட்டு அதற்குப் பதிலாக கவரிங் நகைகளை வைக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதைப்பார்த்த கடையின் ஊழியர்கள், ஓனர், போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பணியில் சேரும் போது ரேவதி கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில் அங்குச் சென்று போலீஸார் விசாரித்தனர். அப்போது அவை போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து ரேவதியின் செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரித்து அவரைப் பிடித்தனர். விசாரணையில் குடும்பத்தின் வறுமை காரணமாகவும் ஆடம்பரமாக வாழவும் ரேவதி நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 4.10 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ரேவதி, எம்.கே.பிநகர், சர்மா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விசாரணைக்குப்பிறகு ரேவதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

கைது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட ரேவதி பக்காவாக பிளான் போட்டு ஒரிஜினல் தங்க, வைர நகைகளை திருடி விட்டு அதற்குப் பதிலாக கவரிங் நகைகளை வைத்திருக்கிறார். ரேவதிக்கு இந்த ஐடியாவை கொடுத்தது யார் என்று விசாரித்து வருகிறோம். வழக்கமாக நகைக்கடையில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சோதனைக்குப் பிறகே வெளியில் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் ரேவதி வேலைப்பார்த்த நகைக்கடையில் அப்படி பெரியளவில் எந்தவித சோதனையும் இல்லாததால் கவரிங் நகைகளை வைத்துவிட்டு விலை உயர்ந்த வைரம், தங்க நகைகளை ரேவதி திருடி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ரேவதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

வழக்கறிஞர் கொலையில் கூலி பாக்கி; உ.பி போலீஸில் புகாரளித்த கூலிப்படைத் தலைவன்!

உத்தரப்பிரதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த கூலிப்படைத் தலைவன், கொலைக்கான மீதி கூலித் தொகையை பெற்றுத் தருமாறு, மீரட் நகரில் உள்ள காவல்... மேலும் பார்க்க

சென்னை: 45 நாள்களேயான ஆண் குழந்தை கடத்தல் - அரசு உதவி தொகை வாங்கி தருவதாகக் கூறி கடத்திய பெண்!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி (31). இவருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்ததோடு ஆண் குழந்தையை கண்ணு... மேலும் பார்க்க

சகோதரியின் காதலனுக்கு மது விருந்து... துண்டு துண்டாக சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்..!

வேறு மதத்தை சேர்ந்தவர்களை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ குடும்பத்தில் கடும் எதிர்ப்பை சந்திக்கின்றனர். மும்பையில் அவ்வாறு வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். மும்ப... மேலும் பார்க்க

சென்னை: மது போதையில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர்; தர்ம அடி கொடுத்த மக்கள்; பின்னணி என்ன?

தென்சென்னையில் வசிப்பவர் ராணி (34) (பெயர் மாற்றம்). இவர், சென்னை போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்காடு சாலை பகுதியில... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் பெண்களிடம் பாலியல் சீண்டல்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமைக் காவலர்!

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் சுரேஷ். கதிர்வேல் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் குடிபோதையில் அருகிலுள்ள ஒரு வீட்டின் சுவர்... மேலும் பார்க்க

மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படி... மேலும் பார்க்க