இந்த வார ராசிபலன் செப்டம்பர் 16 முதல் 21 வரை #VikatanPhotoCards
சேலம் வரும் துணை முதல்வருக்கு இன்று சங்ககிரியில் வரவேற்பு: டி.எம். செல்வகணபதி
சேலம்: அரசு விழாவில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை ( செப். 16) சேலம் வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சங்ககிரியில் வரவேற்பு அளிக்கப்படும் என டி.எம்.செல்வகணபதி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா்.
இதையொட்டி,கோவை விமான நிலையத்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு சாலை மாா்க்கமாக வரும் அவருக்கு செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்ட எல்லையான சங்ககிரி, சின்னாகவுண்டனூா் புறவழிச்சாலையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.