பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
சோழீசுவரா் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் கந்த சஷ்டி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முருகப்பெருமானுக்குரிய விழாக்களில் சிறப்புபெற்ற சஷ்டி விழா மற்றும் சஷ்டி விரதம் சனிக்கிழமை தொடங்கியது. விழாவில் வரும் 7-ஆம் தேதி சூரசம்ஹார விழா 8ம் தேதி திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. அதன்படி பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா தொடக்க விழாவில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொறியாளா் அ.வைரவன், அ.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உபயங்களை வழங்கினா். வலையபட்டி மலையாண்டி கோயிலில் புதன்கிழமை காப்புக்கட்டப்பட்டு, தினமும் சுவாமி வீதியுலா நடைபெற்று, வரும் 7-ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதேபோல், பொன்னமராவதி பாலமுருகன் கோயில், தேனிமலை முருகன் கோயில், வையாபுரி சுப்பிரமணியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சஷ்டி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.