செய்திகள் :

ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

post image

ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

விரைவில், இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து புதிய திரைப்படத்தை பிரசாந்த் இயக்கும் அறிவிப்பு வெளியானது.

இதையும் படிக்க: சூர்யா - 45 படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்?

இப்படம் 2026 ஆம் ஆண்டு திரைக்கு வருமென்பதையும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று துவங்கியுள்ளது. முதல் நாளில் கலவரக்காட்சி ஒன்றை எடுத்து வருகின்றனர்.

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

ஆர்யா - கௌதம் கார்த்திக் படத்தின் டீசர் அறிவிப்பு!

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.எஃப்ஐஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள்ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து புதி... மேலும் பார்க்க

தெலுங்கு நடிகருடன் இணையும் இயக்குநர் மணிரத்னம்!

இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மணிரத்னம் இயக்கி கடைசியாக இரு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் திரை... மேலும் பார்க்க

முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் வெளியானது!

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் முதல் பாடலான ‘முகை மழை’ இன்று வெளியாகியுள்ளது.நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன. இவர் தற்... மேலும் பார்க்க

விடாமுயற்சி ‘சவதீகா’ பாடல் விடியோ!

விடாமுயற்சி படத்திலிருந்து சவதீகா பாடல் விடியோ வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருந்தது.‘மங்காத்தா’ ... மேலும் பார்க்க

சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்

சென்னை: எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான மதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ், சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியிருக்கிற... மேலும் பார்க்க