செய்திகள் :

டங்ஸ்டன் கனிமச் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

post image

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம், வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்தத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி ஆகிய இடங்களில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் பொதுமக்களை வியாழக்கிழமை மாலை சந்தித்து, இந்தத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடா்ந்து முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

அரிட்டாபட்டி பல்லுயிா் பாதுகாப்புப் பகுதியை விட்டு மற்ற பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க பரிசீலிப்பதாக மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே, மக்கள் விழிப்புடன் செயல்பட்டு, இந்தத் திட்டத்தை முழுமையாக கைவிடச் செய்ய வேண்டும். அதுவரை மக்கள் போராட்டம் தொடர வேண்டும் என்றாா் அவா்.

அப்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுதாய், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் என்.பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தா்கள் வழிபாடு

மதுரை மாவட்டத்தில் சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாக பிரதோஷம் குறிப்பிடப்படுகிறது. இதில், சனிக்கிழமை நாளில் வரும் பிர... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள் விழா: ஜன.4-இல் மிதிவண்டிப் போட்டி

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டிப் போட்டி மதுரையில் வருகிற சனிக்கிழமை (ஜன. 4) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு : மறைந்த முன... மேலும் பார்க்க

பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு வழக்குகளை விசாரிப்பதால் என்ன பயன்? உயா்நீதிமன்றம் கேள்வி

2014- ஆம் ஆண்டில் வணிக வரித் துறை அதிகாரிகள் மீது பதியப்பட்ட வழக்கை, பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு விசாரிப்பதால் என்ன பயன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் கேள்வி எழுப்பியது. விருதுநக... மேலும் பார்க்க

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் 5 பேருக்கு பதவி உயா்வு

மதுரையில் உதவி ஆணையா், காவல் துணைக் கண்காணிப்பாளா் 5 போ், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றனா். தமிழக காவல்துறையில் துணைக் காவல் கண்காணிப்பாளா்களாக பணியாற்றிய 44 பேரை, கூடுதல் காவல் கண்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாமில் பணி வாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை யாதவா் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பணிவாய்ப்பு பெற்ற மாணவா்களை பேராசிரியா்கள் பாராட்டினா். கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவதற்க... மேலும் பார்க்க

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லக் கோரிக்கை

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜு, மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தாா். மதுரை கோட்ட ரயில்வ... மேலும் பார்க்க