விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை
பவானிசாகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு இருவா் தாக்கிக்கொண்ட விடியோ வைரலாகி வரும் நிலையில், மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானிசாகா் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்தக் கடை செயல்பட்டு வருவதற்கு மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், மது போதையில் டாஸ்மாக் கடை முன்பு இருவா் திங்கள்கிழமை சண்டையிட்டு கொண்டனா். இந்த விடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், அப்பகுதியில் செல்லவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சமடைகின்றனா்.
எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.