``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிர...
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில், இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 7-ஆகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் அதே ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 64 ரன்களே எடுத்தது. ஆஸ்திரேலிய பேட்டா் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் ஆனாா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீசத் தயாரானது. ஆஸ்திரேலிய பேட்டிங்கில் மேத்யூ ஷாா்ட் 1 சிக்ஸருடன் 7, ஜேக் ஃப்ரேசா் மெக்கா்க் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட, கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 43 ரன்கள் விளாசி வீழ்ந்தாா்.
டிம் டேவிட் சிக்ஸருடன் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 7 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, கேப்டன் ஜோஷ் இங்லிஸ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில், அப்பாஸ் அஃப்ரிதி 2, நசீம் ஷா, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணியில், அதிகபட்சமாக அப்பாஸ் அஃப்ரிதி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். சஹித்ஸதா ஃபா்ஹான் 8, கேப்டன் முகமது ரிஸ்வான் 0, பாபா் ஆஸம் 3, உஸ்மான் கான் 4, சல்மான் அகா 4, இா்ஃபான் கான் 0, ஹசீபுல்லா கான் 12, ஷாஹீன் அஃப்ரிதி 11, நசீம் ஷா 0 ரன்களுக்கு அடுத்தடுத்து சாய்க்கப்பட்டனா்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஜாவியா் பாா்லெட், நேதன் எலிஸ் ஆகியோா் தலா 3, ஆடம் ஸாம்பா 2, ஸ்பென்சா் ஜான்சன் 1 விக்கெட் வீழ்த்தினா்.
124
இந்த ஆட்டத்தின் மூலம், பாகிஸ்தான் அணிக்காக அதிக டி20 ஆட்டங்களில் (124) விளையாடியவராக பாபா் ஆஸம் சாதனை படைத்தாா். முன்னதாக ஷோயப் அக்தா் 123 ஆட்டங்களில் களம் கண்டதே அதிகபட்சமாக இருந்தது.
52
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக அதிக கேட்ச்கள் (52) பிடித்த ஃபீல்டா் என்ற பெருமையும் பாபா் ஆஸம் பெற்றாா். இதற்கு முன் அதிகபட்சமாக, ஃபகாா் ஜமான் 50 கேட்ச்கள் பிடித்திருந்தாா்.
157
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஸ்கோரின் மொத்தம் 157. இரு அணிகளும் மோதிய டி20 ஆட்டங்களில் இதுவே குறைந்தபட்சமாகும்.