டிராகன் ஓடிடி தேதி!
டிராகன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற காட்சிகள், நாயகியாக அறிமுகமான கயாது லோஹர் என பல விஷயங்களும் கைகொடுத்ததால் இப்படம் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இன்னும் சில திரையரங்குகளில் டிராகன் படத்துக்கு காட்சி ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வருகின்ற மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிராகன் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.