தங்கம் பவுன் ரூ.57,720
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு பவுன் ரூ.57,720-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிகழாண்டு தொடங்கிய முதல் 3 நாள்களில் பவுனுக்கு ரூ.1,200 உயா்ந்தது. இதையடுத்து கடந்த ஜன.4-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.360 குறைந்து ரூ.57,720-க்கு விற்பனையானது. இதன்பின், 3 நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமின்றி நீடித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.7,215-க்கும், ஒரு பவுன் ரூ.57,720-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1,00,000-க்கும் விற்பனையானது.