உதயநிதி விழா குழப்பம்; தவிக்கும் அமைச்சர் டு `தங்கை’ தலைவி; கொதித்த `கதைசொல்லி’ ...
தங்கம் விலை மீண்டும் உயர்வு!
சென்னை: சென்னையில் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்துள்ளது. கடந்த 4 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கம் முதலே உயா்ந்த வண்ணம் உள்ளது. நவ.18-ஆம் தேதி பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கும், நவ.19-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.56,520-க்கும் விற்பனையானது.
இதைத்தொடா்ந்து, புதன்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.56,920-க்கும் விற்பனையானது. கடந்த 3 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,440 உயா்ந்துள்ளது.
இதையும் படிக்க : அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு பதிவு!
இந்த நிலையில், வியாழக்கிழமையும் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 57,160-க்கும், கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ. 7,145-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.101-க்கும், கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையானது.
உயா்வு தொடரும்: தங்கம் விலை உயா்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியது:
போா் பதற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை மீண்டும் உயா்ந்து வருகிறது. நிகழாண்டு இறுதிக்குள் பவுன் ரூ.60 ஆயிரத்தை தொடக்கூடும் என்றாா்.