செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாதி 165 இடங்களில் வெல்லும்: சஞ்சய் ராவத்

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களைக் கைப்பற்றும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 20 (நேற்று) ஒரே கட்டமாக நடைபெற்றது. இதையொட்டி, 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தமாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதுதொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில்,

நவ.23ல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக மகா விகாஸ் அகாதி தலைவர்கள் வியாழக்கிழமையான இன்று கூடுவார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறினார்.

புதன்கிழமை வாக்குப்பதிவு நடந்து முடிவடைந்த பிறகு, பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றிபெறும் எனக் கணித்துள்ளன. மேலும் சிலர் மேற்கு மாநிலத்தில் எம்.வி.ஏ கூட்டணிக்கு முன்னிலை கொடுத்துள்ளனர்.

மகா விகாஷ் அகாதி மற்றும் எங்கள் கூட்டணிக் கட்சிகளாக பிடபிள்யுபி, சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட சிறு கட்சிகளும் பெரும்பான்மையைத் தாண்டிவிட்டன.

288 தொகுதிகளில் 160-165 இடங்களில் வெற்றி பெறுவோம். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமையும். நான் அதை மிகவும் நம்பிக்கையுடன் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

மகா விகாஸ் அகாதி முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா (யுபிடி), காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஆளும் மகாயுதியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் என்சிபி ஆகிய கட்சிகள் உள்ளன.

மஹாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க உறுதியான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான மகா விகாஸ் கூட்டணி மாநிலத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் அதன் நல்ல காட்சியைத் தொடரும் என்று நம்புகிறது.

புள்ளிவிவரங்களின்படி, 2019 மாநிலத் தேர்தலில் 61.74 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​புதன்கிழமை நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி!

புது தில்லி: தில்லி பேரவைத் தேர்தல் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.தி... மேலும் பார்க்க

அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!

அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்து... மேலும் பார்க்க

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: அதானி குழுமம் விளக்கம்

அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, முற்றிலும் மறுக்கிறோம் என்று... மேலும் பார்க்க

முதல்வர்களையே கைது செய்யும்போது அதானியை பாதுகாப்பது ஏன்? ராகுல்

தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்கா... மேலும் பார்க்க

பாஜக பகிர்ந்த சுப்ரியா சுலேவின் ஆடியோ போலியானதா?

மகா விகாஸ் அகாதி கட்சித் தலைவர் சுப்ரியா சுலே, காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஐபிஎஸ் அதிகாரியுடன் உரையாடுவதாக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆடியோப் பதிவு போலியானதா என்ற கேள்வி ... மேலும் பார்க்க

அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு: கேஜரிவாலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு செய்தாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலால் கொள்கை முறைகேடு ... மேலும் பார்க்க