செய்திகள் :

அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக

post image

புது தில்லி: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கௌதம் அதானி மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்திய மாநில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மோசடி செய்ததாக தொழிலதிபர் கெளதம் அதானி மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் காலகட்டத்தில், வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்திருக்கிறது என்றும் பாஜக சுட்டிக்காட்டியிருக்கிறது.

பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா இது குறித்துப் பேசுகையில், இந்த மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடந்த காலக்கட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பும், அமெரிக்காவில், புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் முன்பும் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதை காட்டுவதாக உள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்கில், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திர மாநிலங்களில் பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும், குறிப்பிட்ட ஆண்டில், காங்கிரஸ் தான் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷூக்கு அமித் மால்வியா பதிலளித்துள்ளார். எனவே, குற்றம்சாட்டுவதற்கு முன்பு, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒடிசாவில் பிஜு ஜனதா தளமும், ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும் ஆட்சியில் இருந்தது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது என்று மால்வியா குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், ரமேஷ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமித் மால்வியா, எப்போதும், ஒரு விவகாரத்தில் எதிர்வினையாற்றுவதற்கு முன்பு, விவகாரத்தை முழுமையாக படித்துவிட வேண்டும், அதுபோலவே, அமெரிக்க நீதிமன்றத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை முழுமையாக மூத்த காங்கிரஸ் தலைவர் படித்திருக்க வேண்டும், குற்றம் நிரூபிக்கப்படும்வரை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள்தான் என்றும் பதிலளித்துள்ளார்.

கடந்த 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியிருப்பதாகவும், அதானியின் செயல் சட்டப்படி தவறானது என நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கௌதம் அதானி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

அதானி உள்ளிட்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு

சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 26 கோடி டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,100 கோடியை லஞ்சமாக அதானி கொடுக்க முன்வந்துள்ளார்.

இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 இடையேயான காலகட்டத்தில், ஒடிஸா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி!

புது தில்லி: தில்லி பேரவைத் தேர்தல் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.தி... மேலும் பார்க்க

அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!

அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்து... மேலும் பார்க்க

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: அதானி குழுமம் விளக்கம்

அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, முற்றிலும் மறுக்கிறோம் என்று... மேலும் பார்க்க

முதல்வர்களையே கைது செய்யும்போது அதானியை பாதுகாப்பது ஏன்? ராகுல்

தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்கா... மேலும் பார்க்க

பாஜக பகிர்ந்த சுப்ரியா சுலேவின் ஆடியோ போலியானதா?

மகா விகாஸ் அகாதி கட்சித் தலைவர் சுப்ரியா சுலே, காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஐபிஎஸ் அதிகாரியுடன் உரையாடுவதாக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆடியோப் பதிவு போலியானதா என்ற கேள்வி ... மேலும் பார்க்க

அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு: கேஜரிவாலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு செய்தாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலால் கொள்கை முறைகேடு ... மேலும் பார்க்க