ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!
தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: உயர் கல்வித்துறையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்!
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.
இதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!
எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அதில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
* அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் வண்ணம், தொகுப்பு நிதி நல்கை ரூ.700 கோடி உயர்த்தி வழங்கப்படும்.
* அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கம் ரூ.50 கோடியில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படும்.
* திறன்மிகு உற்பத்தி, இணையப் பாதுகாப்பு, உணவுத் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், ஆளில்லா வான்கலம் வடிவமைப்பு ஆகிய துறைகளில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
* பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
* 7.5% உள் ஒதுக்கீட்டில் உயர்கல்வி படித்து வரும் 41,038 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும். இதற்காக ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு.
* மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வில், முதன்மை தேர்வில் பெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்றிட உதவித்தொகை அளிக்கும் வகையில் ரூ.10 கோடி நிதி வழங்கப்படும்.
* உயர்கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.