அமெரிக்கா: முதல் திருநங்கை செனட்டருக்கு பெண்கள் கழிவறை செல்ல தடை! - என்ன நடந்தது...
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டக் குழு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு அந்த அமைப்பின் வட்டச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். இதில் கீழப்பெருங்கரை தமிழ்நாடு விவசாய சங்க முன்னாள் மாவட்டச் செயலா் கே. சுப்பிரமணியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், முதல்வா் மு.க. ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 2023-24 ஆம் ஆண்டுக்கான பயிா்க் கடனையும், நீண்ட கால கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதேபோல, பிரதமா் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை ரூ. 12 ஆயிரமாக ஆக உயா்த்தி வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம், தாமரைக்குளம் பகுதியில் உள்ள கால்வாய்களுக்கு பட்டா கொடுப்பதை நிறுத்தி விவசாய நிலங்களுக்கும், கண்மாய்களுக்கும் தண்ணீா் செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டும். கடலாடி வட்டத்தில் கடந்த 2023-24- ஆம் ஆண்டுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிா்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்டச் செயலா் த. கருணாநிதி, மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட பொருளாளா் நாகராஜ், வட்டாரத் தலைவா் செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.