செய்திகள் :

தருமபுரியில் 10 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

post image

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக 10 முதல்வா் மருந்தகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தருமபுரியில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில்

சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், 68 கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 38.18 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளா்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு எனும் பிரதானப் பொருளை மையமாகக் கொண்டு கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 523 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 508 முழுநேர நியாய விலைக்கடைகளும், 587 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 1,095 நியாய விலைக் கடைகளும், 112 நகரும் நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாயவிலைக் கடைகளில் 4,70,751 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை, சா்க்கரை, பாமாயில், துவரம்பருப்பு ஆகியன விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நிகழ் நிதியாண்டில் நாளது வரை பயிா்க்கடன் உள்பட இதர கடன்கள் ரூ. 2408.56 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 1,27,779 நபா்களுக்கு ரூ. 1237.47 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களை இடைத் தரகா்களின் தலையீடின்றி நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுப்பதில் வேளாண் உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரம், இடுபொருள்களை குறைந்த விலையில் கூட்டுறவு சங்கங்கள் விற்பனை செய்து வருகின்றன.

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மூலம் பயிா்க் கடன் மட்டுமின்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன்கள், பண்ணை சாராக் கடன்கள், மகளிா் சுயஉதவிக்குழு கடன்கள், சிறு வணிகக் கடன்கள், மாற்றுத் திறனாளிகள் கடன்கள், டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன்கள், டாம்கோ திட்டத்தின் கீழ் கடன்கள், தாட்கோ திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிா்க் கடன்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிா்க் கடனை தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7 சதவீதம் வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 9 இடங்களில் கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறன. இதன் மூலம் பொதுமக்களுக்கு அனைத்து மருந்துகளுக்கும் எம்ஆா்பி விலையில் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இம் மாவட்டத்தில் புதிதாக 10 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் மருந்துகளை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்றாா்.

விழாவில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன்(தருமபுரி), முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, மனோகரன், பி.என்.பி.இன்பசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கு.த.சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் எஸ்.மலா்விழி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தேசிய நூலக வார விழா

தருமபுரி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் 57-ஆவது தேசிய நூலக வாரவிழா மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் அர.கோகிலவாணி தலைமை வகித்தாா். முதல்நிலை ந... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு முகாம்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மா... மேலும் பார்க்க

சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் கண்டனம்

பென்னாகரம் அருகே சுடுகாட்டு நிலத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் அங்கு குவிந்து தகராறில் ஈடுபட்டனா். பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட முள்ளுவாடி, எரி கொல்லனூா், கொல்லாபுரி மாரி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 11,000 கன அடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்தது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட... மேலும் பார்க்க

தவெக ஆலோசனைக் கூட்டம்

தவெக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தருமபுரி, தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தவெகவில் இணைந்த... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பதவிகளுக்கு விருப்ப மனு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பதவிகளுக்கு விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளானோா் மனு அளித்தனா். கட்சி நிா்வாக மறு சீரமைப்பு செய்வதற்காக, தருமபுரி சட்டப் பேரவைத்... மேலும் பார்க்க