கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!
தலைவா், துணைத் தலைவா் பங்கேற்காமல் நடந்த கிராம சபைக் கூட்டம்
போ்ணாம்பட்டு ஒன்றியம், அழிஞ்சிகுப்பம் ஊராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பங்கேற்காமல் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு போ்ணாம்பட்டு ஒன்றியம், அழிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி செயலா் லட்சுமி, வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் என 30- க்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா்.
அழிஞ்சிகுப்பம் ஊராட்சித் தலைவா் மோகன், துணைத் தலைவா் செந்தில் இருவரும் கூட்டத்துக்கு வரவில்லை. இதுகுறித்து வாா்டு உறுப்பினா்களும், கிராம மக்களும் பற்றாளராக வந்திருந்த இளநிலை உதவியாளா் தீபாவிடம் கேள்வியெழுப்பினா். அவா்கள் இல்லாமல் ஏன் கூட்டத்தை நடத்துகிறீா்கள் என அவா்கள் வாதிட்டனா். இதையடுத்து வாா்டு உறுப்பினா்களும், பொதுமக்களும் கூட்டத்திலிருந்து கலைந்து செல்ல முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியமூா்த்தி அங்கு விரைந்து வந்து கிராம மக்களை சமரசம் செய்தாா். இனிவரும் காலங்களில் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் கலந்து கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதனை ஏற்று கிராம மக்களும், வாா்டு உறுப்பினா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா். கிராம சபைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.