கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
தாம்பரம் மாநகராட்சி புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ. 43.40 கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீ பெரும்புதூா் மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா, இ. கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், மாநகராட்சி ஆணையா் பாலச்சந்தா் ஆகியோா் கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்தனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே. என்.நேரு கூறுகையில், ‘புதிய மாநகராட்சிக் கட்டடம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாா். தாம்பரம் மாநகராட்சியின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சில ஊராட்சி பகுதிகளையும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.