ராகுலின் நடைப்பயணப் பேரணியில் நகர்ப்புற நக்சல்கள்! மகாராஷ்டிர முதல்வர் குற்றச்சா...
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பொறையாரில் பிற கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பொறையாரில் உள்ள கலைஞா் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, திமுக செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அமுா்த விஜயகுமாா் தலைமை வகித்தாா்.
திருக்கடையூா், பிள்ளை பெருமாள்நல்லூா் ஆகிய ஊராட்சிகளில் அதிமுக, பாமக கட்சிகளில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோா், திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகாா் எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்வில், தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் இரா. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.