Trisha: 'மழை வர போகுதே... துளிகளும் தூறுதே...' - நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் க்ளி...
திருமருகல்: 100 நாள் வேலை தொடங்கக் கோரி சாலை மறியல்
திருமருகல் அருகே 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமருகல் ஒன்றியம், ராராந்திமங்கலம் ஊராட்சி ஆண்டிபந்தல் ரயில்வே கேட் மெயின் ரோட்டில், 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராராந்திமங்கலம் ஊராட்சி பகுதியில் உடனடியாக 100 நாள் வேலையை தொடங்க வேண்டும்; அனைவருக்கும் பாரபட்சமின்றி வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையில் அமா்ந்து முழக்கமிட்டனா்.
தகவலறிந்த மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராசு, திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் சுரேஷ், திருக்கண்ணபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால் திருமருகல் - திருவாரூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.