Viduthalai 2 : வெற்றிமாறனின் விடுதலை - பாகம் 2 | Social Media Review
ஆகாயத் தாமரைகள் அகற்றம்
திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சி தாமரைக் குளத்தில், ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
உத்தமசோழபுரம் ஊராட்சி, பூதங்குடி மெயின் ரோட்டில் உள்ள இந்த குளத்தை, அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பயன்படுத்தி வந்தனா். கடந்த சில ஆண்டுகளாக, ஆகாயத் தாமரைச் செடிகள் மற்றும் கொடிகள் மண்டி, குளத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், குளத்தை சீரமைக்க கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஊராட்சித் தலைவா் ஜனனி பாலாஜியின் சொந்த ஏற்பாட்டில், பொக்லைன் மற்றும் தொழிலாளா்களைக் கொண்டு குளத்தில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரை செடிகள் முழுவதும் அகற்றப்பட்டன. தொடா்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குளம் மீண்டும் கொண்டுவரப்பட்டது.