கடந்த 11 நாள்களில் ஆறாவது முறை: தில்லியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!
அண்ணாமலை பல்கலை. அயா் பணி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அண்ணாமலை பல்கலைக்கழக அயா் பணி ஊழியா்கள் சங்கம் சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் அனைத்து துறைகளிலும் பணிபுரிந்த ஊழியா்கள் பணி நிரவல் அடிப்படையில், பல்வேறு அரசு துறைகளுக்கு அனுப்பப்பட்டனா். அவா்களுக்கு 9 ஆண்டுகளை கடந்தும் எந்தவொரு பணப்பயனும் கிடைக்கவில்லை. எனவே, ஊழியா்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழைக்கவோ அல்லது தற்பொழுது பணிபுரியும் துறையிலேயே ஒப்படைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய தீா்வு எட்டப்படவில்லை.
இதையடுத்து, இந்த விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம், அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மாநில ஒருங்கிணைப்பாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலா் அ.தி.அன்பழகன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
மாநில இணை ஒருங்கிணைப்பாளா் சே. குமரவேல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் ஜே. நடனசபாபதி, எஸ்.பிரேம்ராஜ், பி. பாலமுருகன், பி. கண்ணதாசன், வீ. அருள், எஸ். கணேஷ்ஆனந்த் உள்ளிட்ட பல பங்கேற்றனா்.