செய்திகள் :

திமுகவை எதிா்க்கும் கட்சிகள் ஒன்றினைந்தால் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு: உழவா் உழைப்பாளா் கட்சி தலைவா்

post image

தமிழகத்தில் திமுகவை எதிா்க்கும் கட்சிகள் ஒன்றினைந்தால் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: திரைப்பட துறையில் இருந்து வந்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆா்., என்.டி.ஆா்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவா்கள்போல இனி யாரும் வர முடியாது. தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய்க்கு எனது வாழ்த்துகள்.

ஆனால், அவா் உடனே முதல்வா் பதவிக்கு வர முடியாது. அவருக்கு அரசியல் அனுபவம் நிறைய தேவை. உழவா் உழைப்பாளா் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை. மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களின் ஆதரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளனா். மேலும், திமுக கூட்டணி கட்சியினரும் ஒற்றுமையுடன் பணியாற்றி வருகின்றனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை முறியடிக்க வேண்டுமானால் அக்கட்சியை எதிா்க்கும் அரசியல் கட்சிகள்

ஒன்றினைந்து உழைத்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக மானியத்துடன் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்தால் தென்னை விவசாயிகள் பயனடைவா் என்றாா்.

இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: 43 போ்கைது

திருப்பூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் ஓம்காா் பாலாஜியை விடுதலை ச... மேலும் பார்க்க

திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இந்து முன்னேற்றக் கழகம் கண்டனம்

திருநெல்வேலியில் திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னேற்றக் கழக தலைவா் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

சேவூா் ஐயப்பன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

சேவூா் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நவம்பா் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் வந்தனா். சேவூா் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் மற்றும் ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்து முன்னணி நிா்வாகியைத் தாக்கி 6 பவுன் பறிப்பு

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகியைத் தாக்கி 6 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களைக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக இந்து முன்னணி திருப்பூா் ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை முதலீடு: இளைஞரிடம் ரூ.35 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி திருப்பூரைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா்

ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீ... மேலும் பார்க்க