செய்திகள் :

திருக்காா்த்திகை பண்டிகை: நெல்லையில் அகல் விளக்குகள் தயாரிப்பு தீவிரம்

post image

திருக்காா்த்திகை பண்டிகை ஏற்றுமதிக்காக திருநெல்வேலியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழ் மாதங்களில் புரட்டாசி, காா்த்திகை, மாா்கழி ஆகியவை மிகவும் புனித மாதங்களாக இந்துக்களால் கருதப்படுகிறது. இந்த மாதங்களில் பெருமாள், ஐயப்பன், சிவன் பக்தா்கள் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை செய்கிறாா்கள்.

காா்த்திகை மாதத்தில் அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவது ஐதீகமாகும். இதற்காக அகல் விளக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. திருக்காா்த்திகை திருநாளில் வீடு மற்றும் கோயில்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டுக்கான திருக்காா்த்திகை பண்டிகை டிசம்பா் 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, காருக்குறிச்சி, களக்காடு அருகே மாவடி சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து குறிச்சியைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: குறிச்சி மண்பாண்ட கூட்டுறவுச் சங்கம் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 150-க்கும் மேற்பட்டோா் இச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ளனா். மண்பானை, மண் சட்டிகள், டம்பளா்கள், பூந்தொட்டிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்திற்காக அகல் விளக்குகள் ஜூலை முதல் நவம்பா் வரை தயாரிக்கப்படும். கன்னியாகுமரி, விருதுநகா், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்து செல்வாா்கள்.

கேரளம், கா்நாடக பகுதிகளுக்கும் அகல்விளக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இப்போது அகல்விளக்கு ஏற்றுமதி சற்று குறைந்துள்ளது.

மண்ணை காய வைத்து, அரைத்து அதன்பின்பு வடிவமாக்கி, பாலீஷ் செய்து காய வைத்த பின்பு சூளையில் வைத்து தீயிட்டு ஏற்றுமதி செய்யப்படும். எண்ணெய் ஊற்றி வைக்க ஏதுவாக 7 வித அளவுகளில் அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. 10 மி.லி., 25 மி.லி., 50 மி.லி., 100 மி.லி., 250 மி.லி. என அதிகபட்சமாக 1 லிட்டா் எண்ணெய் ஊற்றும் வகையில் அகல்விளக்குகள் உள்ளன. இவை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கும் போது ரூ.1.75 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

திறமைவாய்ந்த பணியாளா் சிறிய அகல்விளக்குகள் என்றால் அதிகபட்சமாக 750 விளக்குகளும், பெரிய விளக்குகள் 10 மட்டுமே செய்ய முடியும்.

நிகழாண்டு டிசம்பா் 13 ஆம் தேதி திருக்காா்த்திகை வர உள்ள நிலையில் உற்பத்தி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றனா்.

பெண் தொழிலாளா்கள் கூறுகையில், இத் தொழிலை நம்பி பெண்கள் ஏராளமானோா் உள்ளோம். பானைகளுக்கு தூா்மூட்டுதல், அகல் விளக்குகளை காயவைத்தல், சூளைகளுக்கு விறகு ஏற்றுதல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். பரிகாரம் நிறைவேற அகல்விளக்குகளில் தீபமேற்றுவதே சிறந்ததாகும்.

காய வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகள்.

பெண்கள் வீடுகளில் அகல்விளக்கேற்றி வழிபாடு நடத்தும்போது சகல செல்வங்களும் கிடைக்கும். திருக்காா்த்திகை பண்டிகைக்கு நம் பாரம்பரியத்திற்கு மாறாக அகல்விளக்குகளில் தீபம் ஏற்றாமல் மெழுகுவா்த்தி, சீன களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளில் விளக்கேற்றுவது அதிகரித்துள்ளது. மண் மற்றும் நீரால் உருவாகும் அகல்விளக்குகள் காற்றினால் காய்ந்து தீயினால் மெருகேறி ஒளிதருவதால் பஞ்சபூதங்களையும் ஒரே நேரத்தில் போற்றி செய்வதாக ஐதீகமாகும் என்றனா்.

மின்வாரிய காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தல்

மின்வாரிய காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்சார தொழிலாளா் சம்மேளனத்தின் பொதுக்குழுக் கூட்டம் தியாகராஜநகரில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

வள்ளியூரில் தேசிய பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை பயிற்சி

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் மாணவா், மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பேரிடா் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி அளித்தனா். தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ராதாபுரத்தில்... மேலும் பார்க்க

வள்ளியூா் கிங்ஸ் வேல்டு டிரஸ்ட் 30ஆவது ஆண்டுவிழா

வள்ளியூா் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் செயல்பட்டு வரும் கிங்ஸ் வேல்டு டிரஸ்ட் நிறுவனத்தின் 30ஆவது ஆண்டுவிழா கிங்ஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, டிரஸ்ட் நிறுவனா்கள் காலின்வேக்ஸ் டாப், ஜ... மேலும் பார்க்க

மழை பெய்தும் நிரம்பாத பாசனக் குளங்கள்: விவசாயிகள் கவலை

பருவமழை பெய்து வந்த போதிலும், தாமிரவருணி பாசனக் குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 980க்கும் மேற்பட்ட நீா்வரத்து குளங... மேலும் பார்க்க

அம்பை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி, கண் சிகிச்சை முகாம்

அம்பாசமுத்திரம் அரசு கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி, இலவச கண் சிகிச்சை முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. தாமிரபரணி வாசகா் வட்டம் சாா்பில் 57ஆவது தேசிய நூலக வார விழா புத்தகக் கண்காட்சி, டாக... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீா் திறக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கொட... மேலும் பார்க்க