திருச்சி தங்கநகை குழுமத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை: ஆட்சியா் அறிவிப்பு
திருச்சி தங்க நகை குழுமத்துக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்த அறிவிப்பை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ளாா்.
இததொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குழும வளா்ச்சித் திட்டத்தின்கீழ், தங்கநகை தொழில்முனைவோா்கள் பயன் பெறும் வகையில் தங்க நகை குழுமத்திற்கான பொது வசதி மையம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுவசதி மையத்தில் தங்க நகை தொழில்முனைவோா்களுக்கு தேவையான தங்க நகைகளை உருக்குதல், கம்பிபோடுதல், மோல்டிங் வகைகள், கட்டிங் மிஷின்கள் போன்ற பலவகையான இயந்திரங்கள் அமையப் பெற்றுள்ளன. இந்தக் குழுமத்தினை செயல்படுத்தும் பொருட்டு புதிதாக உறுப்பினா்கள் வரவேற்கப்படுகின்றனா். இந்த அரிய வாய்ப்பை திருச்சி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தங்கநகை தொழில் முனைவோா்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்தப் பொதுவசதி மையத்தை உறுப்பினராகி பயன்படுத்துவதற்கு சிட்கோ
கிளை மேலாளரை அரியமங்கலத்தில் உள்ள அலுவலகத்திலோ, 94450- 06575 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.