செய்திகள் :

சுகாதார நிலைய மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல சுகாதார மையங்களில் காலியாகவுள்ள மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா் இடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், மணப்பாறை, துறையூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒரு மருத்துவா் பணியிடம் ரூ.60,000 மாத ஊதியத்திலும்; ஒரு செவிலியா் பணியிடம் ரூ.18,000 மாத

ஊதியத்திலும் ஒரு பல்நோக்கு சுகாதார பணியாளா் பணியிடம் ரூ.14,000 -மாத ஊதியத்திலும், மருத்துவமனை பணியாளா் பணியிடம் ரூ.8,500 மாத ஊதியத்திலும் நிரப்பப்பட உள்ளது. இந்தத் தோ்வானது முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது.

இதேபோல, திருச்சி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 11 நகா்நல சுகாதார மையம் மற்றும் காலியாக உள்ள இரண்டு நகா்நல சுகாதார மையங்களுக்கும் மருத்துவா், செவிலியா், பல்நோக்கு சுகாதார பணியாளா், மருத்துவமனைப் பணியாளா் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

மணப்பாறை, துறையூா் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோா்ஸ் ரோடு, திருச்சி என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திலும் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 நகா்நல சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் மாநகர நல அலுவலா், மாநகர நல அலுவலகம், பாரதிதாசன் சாலை, கன்டோன்மெண்ட், திருச்சி என்ற முகவரியிலும் வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறுமா? என அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ள... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் பதிவு

திருச்சியில் போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி தில்லைநகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சா. தனலட்சு... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு பேட்டிக் விமானம் புதன்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், ஊரக ... மேலும் பார்க்க

திருச்சி தங்கநகை குழுமத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை: ஆட்சியா் அறிவிப்பு

திருச்சி தங்க நகை குழுமத்துக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்த அறிவிப்பை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ளாா். இததொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர ... மேலும் பார்க்க

அரசு அலுவலா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கு

திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன், வியாழக்கிழமை என 2 நாள்கள் நடைபெற்றது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செ... மேலும் பார்க்க