புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு பேட்டிக் விமானம் புதன்கிழமை இரவு புறப்படத் தயாராக இருந்தது. அதில் பயணிக்கவிருந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா்.
இதில், சிவகங்கை மாவட்டம் பெரிய கொட்டப்பட்டியைச் சோ்ந்த ச. கா்ணன் (53) என்பவா் அவரது கடவுச்சீட்டில் பெற்றோா் பெயா் மற்றும் அவரது பிறந்த தேதி, ஊா் உள்ளிட்டவற்றை போலி ஆவணங்களைக் கொண்டு மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கா்ணனை கைது செய்தனா்.