காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
திருநங்கையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான திருநங்கையா்கள், திருநங்கை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கையா் தினம் ஏப்.15-இல் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் திருநங்கையா் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்களை ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்த்துக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பிப்.10 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-299460 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.