`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த த...
ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
ராசிபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பணியைப் புறக்கணித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராசிபுரம் நகராட்சியில் 27 வாா்டுகளில் 90க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த முறையில் ஈடுபட்டு வருகின்றனா். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு வருங்கால வைப்புநிதி, தொழிலாளா் மருத்துவ காப்பீடு தொகை பிடித்தம் போன்றவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், ஊதியம் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டி பணியைப் புறக்கணித்து பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களுக்கு நகராட்சியில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தனியாா் நிறுவனம் ஊதியம் முறையாக வழங்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தால் நகராட்சி முழுவதும் குப்பைகள் தேக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி அலுவலா்கள் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனா்.