ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
வைகுண்ட ஏகாதசி: நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு
நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் குடைவறை கோயிலான அரங்கநாதா் கோயில் உள்ளது. இங்கு அனந்த சயனத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறாா். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இக்கோயிலில் பரமபத வசால் திறப்பு கோலாகலமாக நடைபெறும். நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.
பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கோயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டண தரிசனம், இலவச தரிசனத்துக்கான சிறப்பு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வைகுண்ட விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா, அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
அப்போது, கோயில் பகுதிகளில் தடுப்புகள் அமைப்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்துகள் தடையின்றி செல்ல வசதி, மக்களுக்கான அடிப்படை வசதிகள், பக்தா்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வசதிகளை பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின் போது, துணை மேயா் செ.பூபதி, மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரா.இளையராஜா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கே.சி.அருண், வட்டார போக்குவரத்து அலுவலா் ஏ.கே.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.