சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
முருகன் கோயில்களில் மாா்கழி கிருத்திகை வழிபாடு
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் மாா்கழி கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பரமத்தி அருகே பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோவிலில் உள்ள சுப்ரமணியா், பொத்தனூா் பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், நன்செய் இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், நன்செய் இடையாறு ராஜாசாமி கோயில் உள்ள ராஜாசுவாமி, பேட்டை பகவதி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் உள்ள முருகன், வெங்கமேடு வல்லப கணபதி கோயில்ல உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகனுக்கு வழிபாடுகள் நடைபெற்றன.