செய்திகள் :

திருவள்ளூர்: ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் இடிப்பு!

post image

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் ருக்மணி சத்யபாமா சமேத சந்தன கோபால் கிருஷ்ண சந்தன விநாயகர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் வியாழக்கிழமை கோயிலை இடிக்க முடிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் கொட்டும் மழைக்கு இடையே இடித்து அகற்றினர்.

அப்போது கோயிலை இடிக்க விடாமல் போலீஸார் பாதுகாப்பையும் மீறி திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் மழையில் நனைந்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மக்களின் மறியலால் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து வட்டாட்சியர் வாசுதேவன், துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழரசி மற்றும் ஊராட்சி தலைவர் தமிழன்பன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய மின்தடை

திருவள்ளூா் நாள்: 16.11.2024 - சனிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடங்கள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பா... மேலும் பார்க்க

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சேவாலயா குழந்தைகள் தினம்

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் தினவிழாவையொட்டி, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு சேவாலயா சாா்பில் ரொட்டிகள், பழங்கள் வழங்கப்பட்டன (படம்). சேவாலயா கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் தினவி... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் கோயில் சுற்றுச் சுவா் இடிப்பு: பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை இடிக்க வியாழக்கிழமை பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுச் சுவா் மட்டும் இடித்து அகற்றப்ப... மேலும் பார்க்க

பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா

குழந்தைகள் தினவிழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிக்கப்பட்டது. திருத்தணி சுதந்திரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விழாவையொட்டி பேச்சு, ஓவியம், மாறுவேடப் போட்டி... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூா் ஆயில்மில் எதிரே உள்ள தனியாா் அரங்கத்தில் நகர அதிமுக செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. நகர செயலாளா் ஜி.கந்தசாமி வரவேற்றாா். இதில் திருவள்ளூா் மேற்கு மா... மேலும் பார்க்க

பொன்னேரியில் மருத்துவா்கள் போராட்டம்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் போராட்டம் காரணமாக புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு, நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்லக்க... மேலும் பார்க்க