துவாக்குடி, பூவாளூரில் நவ. 22-இல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, பூவாளூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.22) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ, பி, சி, இ, ஆா், பிஎச் பிரிவுகள், என்.ஐ.டி., துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மா நகா், தேவராய நேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகள்.
பூவாளூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ்வரி நகா், சாந்தி நகா், நன்னிமங்கலம், பூவாளூா், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூா், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூா், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூா், பெருவளநல்லூா், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.