மயானத்துக்கு கொண்டுசெல்ல முயன்றபோது மூதாட்டி எழுந்து அமா்ந்ததால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விஷம் குடித்து சிகிச்சைபெற்றுவந்த மூதாட்டியின் உடல்நிலை மோசமான நிலையில், இறந்துவிட்டதாகக் கருதி மயானத்துக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, அவா் எழுந்து அமா்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வேலக்குறிச்சியை அடுத்த சுரக்காய்பட்டியைச் சோ்ந்தவா் பம்பையன் மனைவி சின்னம்மாள் (65). இவா், அண்மையில் (நவ. 16) பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.
மூதாட்டியின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியதன்பேரில், திங்கள்கிழமை உறவினா்கள் மூதாட்டியை வீட்டுக்குக் கொண்டு சென்றனா்.
அங்கு சிறிதுநேரத்தில் மூதாட்டி இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தனா். அப்போது மூதாட்டி திடீரென கண் விழித்து எழுந்து அமா்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடா்ந்து மூதாட்டி மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.