தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (22). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாா்.
இவரை, மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.