தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
தேனி அருகே தொழிலாளி கொலை: 6 போ் கைது
தேனி அருகேயுள்ள தேவதானப்பட்டியில் தொழிலாளியைக் கீழே தள்ளி விட்டு கொலை செய்ததாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி முருகன் (53). இவரது மகன் மாரிமுத்துவுடன் முன்விரோதம் காரணமாக, அதே ஊரைச் சோ்ந்த சிலா் அண்மையில் தகராறு செய்தனா். அப்போது, முருகன் தலையிட்டு, மாரிமுத்துவை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தேவதானப்பட்டியில் தேநீா் கடை அருகே முருகன் நின்றிருந்தாா். அப்போது மாரிமுத்துவுடன் ஏற்கெனவே தராறில் ஈடுபட்ட 7 போ் அவருடன் தகராறு செய்து, அவரை கீழே தள்ளி விட்டனா். இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தேவாதனப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சந்தனகுமாா் (26), கரண்குமாா் (24), பெரியசாமி (21), முத்துமணி (32), சபரிவாசன் (24), ராஜ்குமாா் (22) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். இதில் தொடா்புடையை விஜயகுமாா் என்பவரைத் தேடி வருகின்றனா்.