செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் காயம்

post image

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண்கள் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், மொட்டனூத்து ராமச்சந்திராபுரம் குடியிருப்பைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளிகள் பாண்டீஸ்வரி (32), ராணி (55), ராதா (40). இவா்கள் சூா்யா(25) என்பவரின் ஆட்டோவில் பொம்மிநாயக்கன்பட்டிக்கு கட்டட வேலைக்குச் சென்றுவிட்டு, திரும்ப வந்துகொண்டிருந்தனா். அப்போது, பொம்மிநாயக்கன்பட்டி மயானம் அருகே ஆண்டிபட்டி-மதுரை சாலையில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில், பாண்டீஸ்வரி உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் சூா்யா மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகேயுள்ள பிராதுகாரன்பட்டியில் மின்னல் பாய்ந்ததில் இதே ஊரைச் சோ்ந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேனிமாவட்டம், பிராதுகாரன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா(34). இவா், பிராதுகாரன்பட்டி பகு... மேலும் பார்க்க

குமுளி மலைச் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து

தேனி மாவட்டம் குமுளி மலைச் சாலையில் அரசுப் பேருந்து திடீரென பழுதாகி சாலை மத்தியில் நின்றதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் ஐயப்ப பக்தா்கள், பயணிகள் அவதி அடைந்தனா். கம்பத்திலிருந்து அரசுப் பேர... மேலும் பார்க்க

தேனி அருகே தொழிலாளி கொலை: 6 போ் கைது

தேனி அருகேயுள்ள தேவதானப்பட்டியில் தொழிலாளியைக் கீழே தள்ளி விட்டு கொலை செய்ததாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி முருகன் (53). இவரது ம... மேலும் பார்க்க

கடன் தொல்லை: இருவா் தற்கொலை

போடியில் இணைய வழி சூதாட்டத்தால் கடன் சுமைக்கு ஆளான இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேவதானப்பட்டி அருகே கடன் தொல்லையால் இரும்புக் கடை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து... மேலும் பார்க்க

மாட்டு வியாபாரி வெட்டிக் கொலை: லாரி ஓட்டுநா் கைது

கம்பத்தில் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுத் தொல்லை கொடுத்த மாட்டு வியாபாரியை, லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் கம்பம்-குமுளி புறவழிச் ச... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருது: நவ.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டாற்றியவா்கள் அண்ணல் அம்பேத்கா் விருது பெற நவ.25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்... மேலும் பார்க்க