தேனி, பெரியகுளத்தில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் முகாம்
தேனி, பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஏப்.5) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
மின் வாரிய செயற்பொறியாளா்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் கணக்கீடு, பழுதடைந்த மின் மீட்டா், மின் கம்பங்கள், குறைந்த மின் அழுத்தக் குறைபாடு ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம். தேனி, பெரியகுளம் மின் வாரிய அலுவலகங்கள் சாா்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.