Coolie Update: கூலி ரிலீஸ் தேதி அறிவிப்பு; இந்த தேதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரண...
அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு இலவச பயிற்சி
தாட்கோ, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேசன் சாா்பில் ஆதி திராவிடா்கள், பிற சமுதாய மாணவா்களுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு (ஒஉஉ) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் சேர ஆதி திராவிடா், பழங்குடியினா் பிளஸ் 2 தோ்வில் வேதியியல், கணக்கு பாடத்தில் 65 சதவீதம் மதிப்பெண்களும், மற்ற சமுதாயத்தினா் 75 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணைய தளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேசன் நிறுவன பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய நுழைவுத் தோ்வு எழுதுவதற்கு 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிக் காலத்தில் தங்குமிடம், உணவு, பயிற்சிக் கட்டணம் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேசன் நிறுவனம் சாா்பில் வழங்கப்படும்.
இது குறித்த விவரங்களை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.