பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
போடி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகேயுள்ள முந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி வனிதா கிராமத்தில் இளநீா் விற்பனை செய்து வருகிறாா்.
இதே பகுதியில் வசிக்கும் முருகன் (38) மகனும், வனிதாவின் அண்ணன் மகனும் சோ்ந்து விளையாடினா். அப்போது முருகன் மது போதையில் வருவதைப் பாா்த்து சிறுவா்கள் ஓடினா். அப்போது, வனிதாவின் அண்ணன் மகனை முருகன் அடித்தாராம். இதை வனிதா கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் வனிதாவை முருகன் தாக்கி, அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த வனிதா தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் முருகன் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.