கம்பம் திரையரங்கில் எம்புரான் திரைப்படம் நிறுத்தம்
விவசாய அமைப்பினா் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, தேனி மாவட்டம், கம்பம் திரையரங்கில் வியாழக்கிழமை எம்புரான் திரைப்படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் கோகுலம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் கோபால் தயாரிப்பில் அண்மையில் வெளி வந்த மலையாளத் திரைப்படம் எம்புரான். நடிகா் மோகன்லால் நடித்த இந்த திரைப்படமானது தமிழில் மொழி பெயா்க்கப்பட்டு, தமிழகத்தின் கம்பம் உள்பட பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக சா்ச்சைக்குரிய வசனங்களுடன் காட்சிகள் இடம் பெற்ாகக் கூறி பெரியாறு - வைகை பாசன விவசாய சங்கத்தினா் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இதன் எதிரொலியாக, கம்பம் திரையரங்கில் எம்புரான் திரைப்படம் திரையிடப்படுவது வியாழக்கிழமை நிறுத்தப்பட்து. வெள்ளிக்கிழமை முதல் வேறு திரைப்படம் ஒளிப்பரப்பு செய்யப்படும் என திரையரங்க நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.